தஞ்சை டாக்டர் நல்லி குப்புசாமி கலை கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது .
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர். எழிலன் ஆலோசனைப் படியும் தஞ்சை டாக்டர் நல்லி குப்புசாமி கலைக் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று (01.06.2022) நடைபெற்றது.
இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் தஞ்சை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரும் தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியின் பேராசிரியர் முருகானந்தம், டாக்டர் நல்லி குப்புசாமி கலைக் கல்லூரியின் தலைவர் முனைவர் வெள்ளைச்சாமி, கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜீவஜோதி, தஞ்சை மருத்துவக் கல்லூரியின் ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மாபெரும் இரத்ததான முகாமில் டாக்டர் நல்லி குப்புசாமி கலைக் கல்லூரியின் 80 மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் இரத்ததானம் செய்தனர்.
இந்த நிகழ்வை டாக்டர் நல்லி குப்புசாமி கலைக் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர். சிவகாமி சிறப்பாக ஏற்பாடு செய்து சிறப்புற ஒருங்கிணைத்தார்.