காலியாக உள்ள ஆயர் பதவிகளுக்கு தலித்களை நியமிக்க வேண்டும் .
தலித் கிறிஸ்தவர்கள் இயக்கம் கோரிக்கை.
தலித் கிறிஸ்தவர்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள தனியார் மகாலில் மாநில தலைவர் மருத்துவர் மேரிஜான் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 18 மறை மாவட்டத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகள் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இயக்கத்தைச் சார்ந்த பல்வேறு வளர்ச்சி நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த மாநில தலைவர் டாக்டர் மேரிஜான் கூறியபோது:-
தலித் கிறிஸ்தவர்கள் பிரச்சனை தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக திருச்சபையில் இந்த இயக்கம் சமத்துவம் சம உரிமை பெற போராடிக் கொண்டிருக்கிறது.
திருச்சபை அதிகாரிகள் இதுவரை தீர்வு காணவில்லை. இந்திய ஆயர் பேரவை, இந்திய கத்தோலிக்க பேரவையும் அறிவித்த கொள்கைப்படி தலித் கிறிஸ்தவர்களுக்கு கல்வி நிறுவனங்கள், உயர்பதவிகளில், ஆயர் பதவிகளில் 64% வழங்காமல் இன்றும் ஏமாற்றி வருகின்றனர்.
சமீபத்தில் தலித் கிறிஸ்தவர்கள் இதுவரை யாரையும் நியமிக்கவில்லை அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். தற்போது
கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மன்ற மாவட்டத்தில் காலியாக உள்ள ஆயர் பதவிக்கு தலித் ஆயிரை நியமனம் செய்யவேண்டும், தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் அரசியல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது என தெரிவித்தார்.