இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ஈகை திருநாள் – மசூதிகளில் சிறப்பு தொழுகை

உலகமெங்கும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடபடுகிறது. ஒரு மாத காலம் இஸ்லாமியர்கள் எவ்வித கெட்ட பழக்கம் இல்லாமல் தண்ணீர் பருகாமல் உணவு உண்ணாமல் கடும் விரதமிருந்து ஷவ்வால் பிறை தென்பட்டவுடன் ஷவ்வால் முதல் நாளை ஈகைத்திருநாளாக கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் இன்று நாடுமுழுவதும் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடினர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்தனர்.

மேலும் அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது
மதநல்லினக்கத்தின் அடையாளமாக அனைத்து மதத்தினரும் தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

