இன்றைய (20-03-2022) ராசி பலன்கள்
மேஷம்
வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் நீங்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஆசைகள் நிறைவேறும். மனதில் ஒரு விதமான குழப்பமும், அமைதியின்மைக்கான சூழ்நிலையும் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : வாய்ப்புகள் ஏற்படும்.
பரணி : ஆசைகள் நிறைவேறும்.
கிருத்திகை : குழப்பமான நாள்.
—————————————
ரிஷபம்
வெளியூர் தொடர்பான புதிய வேலை வாய்ப்புகள் சாதகமாகும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். உத்தியோக பணிகளில் விவேகம் வேண்டும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். தடைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : விவேகம் வேண்டும்.
மிருகசீரிஷம் : புரிதல் மேம்படும்.
—————————————
மிதுனம்
இழுபறியாக இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் தொடர்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும். சுயவேலை தொடர்பான முயற்சிகளில், முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : தீர்வு கிடைக்கும்.
திருவாதிரை : ஆசைகள் பிறக்கும்.
புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.
—————————————
கடகம்
தாய் வழியில் ஆதரவு கிடைக்கும். மனதில் தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
புனர்பூசம் : உதவி கிடைக்கும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
—————————————
சிம்மம்
வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு உயர் அதிகாரிகள் மறைமுகமாக ஆதரிப்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வேலையாட்கள் கிடைப்பார்கள். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : காரியசித்தி உண்டாகும்.
—————————————
கன்னி
பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியங்களை முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். தைரியம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : அனுபவம் வெளிப்படும்.
அஸ்தம் : முயற்சிகள் ஈடேறும்.
சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும்.
—————————————
துலாம்
வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் நம்பிக்கையை பெறுவீர்கள். கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பொருளாதார உயர்வை பற்றிய சிந்தனைகள் மேம்படும். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : நம்பிக்கை மேம்படும்.
சுவாதி : ஏற்ற, இறக்கமான நாள்.
விசாகம் : சிந்தனைகள் மேம்படும்.
—————————————
விருச்சிகம்
நெருக்கமானவர்கள் இடத்தில் தேவையற்ற விவாதங்களையும், சந்தேக உணர்வுகளையும் தவிர்த்து பொறுமையுடன் செயல்பட வேண்டும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்திருந்த சில உதவி காலதாமதமாகவே கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த சில பணிகளை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். முயற்சிகள் அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : பொறுமை வேண்டும்.
அனுஷம் : தாமதம் உண்டாகும்.
கேட்டை : இழுபறிகள் குறையும்.
—————————————
தனுசு
வெளியூர் தொடர்பான பயணங்களால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர் வகையில் ஒற்றுமை உண்டாகும். பணிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
மூலம் : நன்மையான நாள்.
பூராடம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
—————————————
மகரம்
உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் அமையும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : இழுபறிகள் குறையும்.
அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
—————————————
கும்பம்
விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். தெளிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.
சதயம் : அதிர்ஷ்டகரமான நாள்.
பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
—————————————
மீனம்
உணவு சார்ந்த செயல்பாடுகளில் கட்டுப்பாடு வேண்டும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். ஆராய்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களிடம் தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
பூரட்டாதி : கட்டுப்பாடு வேண்டும்.
உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
ரேவதி : பொறுமை வேண்டும்.
—————————————