திருச்சியில் சாப்ட் பால் வீரர், வீராங்கனைகளுக்கான தேர்வு திருச்சி கே கே நகர் எஸ்பிஐஒ பள்ளியில் நடைபெற்றது.

மாநில அளவிலான சப் ஜூனியர், ஜூனியர் சாப்ட் பால் விளையாட்டுப் போட்டிகள் வருகிற மார்ச் 26 மற்றும் 27ம் தேதிகளில் திருச்சியில் உள்ள எஸ்பிஐஒ பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டிகளில் விளையாட திருச்சியில் உள்ள சாப்ட் பால் வீரர், வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது,
தேர்வில் பெண்கள் பிரிவில் 56 வீராங்கனைகளும், ஆண்கள் பிரிவில் 86 வீரர்களும் கலந்து கொண்டனர்,
சப் ஜூனியர் பிரிவில் 16 வீரர் 16 வீராங்கனைகளும்,
ஜூனியர் பிரிவில் 16 வீரர்களும் 16 வீராங்கனைகளும் என மொத்தம் 64 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திருச்சி மாவட்ட சங்க தலைவர் டி.ஜே. வெங்கடேஷ் துரை, எஸ்பிஐஓ பள்ளி தாளாளர் கணபதி சுப்பிரமணியன், ஷாப்ட் பால் சங்க செயலாளர் சரவணன், இணை செயலாளர் சூர்யா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.