கவி சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் மகளிருக்கான வருவாய் பெருக்கும் திட்டங்கள் மற்றும் அரசின் நலத் திட்டங்கள் பற்றிய கருத்தரங்கம்.
உலக மகளீர் தினத்தினை முன்னிட்டு மகளிருக்கான வருவாய் பெருக்கும் திட்டங்கள் மற்றும் அரசின் நலதிட்டங்கள் பற்றிய கருத்தரங்கம்.
திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூனாம்பாளையம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் , சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு , ஊராட்சி நூலகம் ,கவி சாரிட்டபில் டிரஸ்ட் மற்றும் ஊராட்சி துவக்கபள்ளி சார்பாக ஊராட்சி தலைவர் அரி கிருஷ்ணன் தலைமையில் ,
பள்ளி தலைமை ஆசிரியர் அழுதா , கவுன்சிலர் சசிகலா குமார், வார்டு உறுப்பினர் திருப்பதி,நூலக வாசகர் வட்ட தலைவர். ராஜ மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவி சாரீட்டபிள் டிரஸ்ட் இயக்குநர். ஆர்.வி. கார்த்திகேயன் , மத்திய மாநில அரசுகள் ஊரக பகுதிகளுக்கும் ,
விவசாய ,தினகூலி மக்களுக்கு வழங்கி வரும் நல உதவிகளை பற்றியும் ,தொண்டுநிறுவனம் வழங்கிவரும் இலவச பயிற்சி திட்டங்களை சிறப்புரை ஆற்றினார்.
பள்ளி பயிலும் அனைத்து மாணவ,மாணவிகள் ,ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
ஊராட்சி நூலகர் புகழேந்தி நிறைவாக நன்றி கூறினார்.