திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வழக்கறிஞர் பொன்.முருகேசன் தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
தூய்மைப் பணியாளர்கள் இன்று திடீர் போராட்டம்.
திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சியில் 40 தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க வேண்டும்,பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.இ.எஸ்.ஐ .,பி.எப். பிடித்தம் செய்ய வேண்டும், வங்கி கணக்கில் சம்பளத்தை செலுத்த வேண்டும். அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துவாக்குடி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஒன்றுதிரண்டு, அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் பொன்.முருகேசன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் உதவி கமிஷனர் அஜய் தங்கம் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.