Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள்,டாக்டர். சுப்பையா பாண்டியன் வழங்கினார்.

0

'- Advertisement -

உறையூர் தமிழ் ஹெர்பல்சில்
முக ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு
நலத்திட்ட உதவிகள்
டாக்டர் கே. எஸ். சுப்பையா பாண்டியன் வழங்கினார்.


திருச்சி உறையூர் தியாகராஜ நகர் நக்கீரன் தெருவில் அமைந்துள்ள தமிழ் ஹெர்பல்ஸ் மையத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

Suresh

டாக்டர் தமிழரசி சுப்பையா பாண்டியன் வரவேற்றார்.

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவரும் தமிழ் ஹெர்பல்ஸ் இயக்குனருமான டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் கலந்துகொண்டு 169 ஏழைப் பெண்களுக்கு இலவச சேலைகள், மதிய உணவு வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் திமுக உறையூர் பகுதி செயலாளர் இளங்கோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
முகாமில் கபசுர குடிநீர், காய்ச்சல் சளி மற்றும் உடல் வலிக்கான மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மருதுபாண்டி, மன்னன் இளங்கோ, சிங்கம் எம்.பி. விஜய், டாக்டர்கள் டி.ஜி.ஆர். வசந்தகுமார், பா.ஜான். ராஜ்குமார், மதிகுமார், கணேசன், சகுந்தலா, சந்தானகிருஷ்ணன், சாய்ராம், செல்வகணபதி, மகாலட்சுமி பிரபாகரன், மற்றும் பரமசிவ தேவர், பீமநகர் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்முகாமில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.