அதிமுக முகவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மாநில தேர்தல் ஆணையருக்கு திருச்சி மாவட்ட செயலாளர் ப.குமார் கடிதம்.
திருச்சி மாவட்ட தேர்தல் பார்வையாளருக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கடந்த 19.02.2022 அன்று நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.
மேற்படி வாக்கு எண்ணிக்கையின் பொழுது கீழ்கண்ட நடைமுறைகளை உறுதிப்படுத்தி தந்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்களை (CCTV Camera) கூடுதலாக அமைக்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையின் போது அஇஅதிமுக சார்பில் வருகின்ற வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை உடனுக்குடன் தாமதமின்றி அறிவித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும்.
தபால் ஓட்டு (Postal Vote) எண்ணிக்கையை உடனுக்குடன் வீடியோ பதிவு செய்திட வேண்டும்.
உயர்நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைபடுத்தி பின்பற்றிட வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கும் கடிதம் எழுதியுள்ளார்
திருச்சி அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் ப.குமார்.