மாநில அளவிலான இரட்டையர் ஆண்கள் இறகு பந்து போட்டி திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள துரோணா இறகுப்பந்து அகாடமியில் நடந்தது.
இதில் திருச்சி, கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல் நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25 அணி வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் முதலிடம் பிடித்த அணிக்கு ரூ. 8,000 மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
இரண்டாவது இடம் பிடித்த அணிக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாவது இடம் பிடித்த அணிக்கு ரூ.3,000 மற்றும் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில் தென்னக ரயில்வே லோன் சொசைட்டி மேலாண்மை இயக்குனர் ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதில் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.