Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெறுபவர்களை கணித்துக் கூறுகிறார் வரலாற்று ஆராய்ச்சியாளர் முனைவர் ஜான். ராஜ்குமார்.

0

 

 

திருச்சி மாநகராட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என வரலாற்று ஆராய்ச்சியாளர் முனைவர்.ஜான் ராஜகுமார் கணிப்பு.

திருச்சி மாநகராட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறு உள்ளது.

இதில் திமுக தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிடுகின்றன.
இதுதவிர பாரதிய ஜனதா கட்சி, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று வரலாற்று நூல்கள் ஆராய்ச்சியாளரும், சமூக ஆர்வலருமான ஜான் ராஜ்குமார் தனது கணிப்பை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாநகராட்சி தேர்ததலில் 65 வார்டுகளில் திமுக 35 முதல் 40 வார்டுகளும், அதிமுக15 முதல் 20 வார்டுகளும், மேலும் கூட்டணி கட்சிக்களான காங்கிரஸ், மதிமுக, கம்யுனிஸ்ட், முஸ்லிம் அமைப்பினர் மீதமுள்ள வார்டுகளை கைப்பற்றுவார்கள் எனவும் அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் 2014 ல் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் முனைவர் ஜான். ராஜ்குமார் வெற்றிபெறும் எனக் கூறிய கனித்த கணிப்பின்படி அதிமுக 38 தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸ் மட்டும் வெற்றி பெறுவார்  என கூறியிருந்தது  குறிப்பிடத்தக்கது.

இவர் யார் வெற்றி பெறுவார் என கணித்து கூறியது இதுவரை சரியாக இருந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.