மாநகராட்சி 24- வது வார்டில்
காங்கிரஸ் சார்பில் சோபியா விமலா ராணி போட்டி.
திருச்சி மாநகராட்சி தேர்தலில் 24-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சோபியா விமலா ராணி களமிறங்கியுள்ளார்.
இவர் காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவராக இருக்கும் எஞ்சினியர் பேட்ரிக் ராஜ்குமாரின் மனைவி ஆவார்.
வேட்பாளர் விமலா ராணி, திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கேஎன் நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதையடுத்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இவருக்கு பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.
கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பேட்ரிக் ராஜ்குமார் கஜா புயல் தாக்கி மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்த போது உதவிக்கரம் நீட்டினார்.
ராகுல்காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் கொரோனா பேரிடரில் மக்கள் இன்னலுக்கு ஆளான போது பல லட்சம் செலவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வாரி வழங்கினார்.
ஏழை எளிய குழந்தைகளின் உயர் கல்வி மற்றும் மருத்துவ செலவினங்களையும் செய்து வெகுஜன மக்களின் அன்பைப் பெற்றுள்ளார்.
இதனால் காங்கிரஸ் வேட்பாளர் சோபியா விமலா ராணி மக்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று உள்ளார்.
அவரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தெரிவித்தனர்.