Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரேஷன் கடைகளில் காலை 7 மணி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். மண்டல இணை இயக்குனர் ஜெயராமன்.

0

'- Advertisement -

 

திருச்சி கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் ஜெயராமன் வெளியிட்டுள்ள
பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது:

திருச்சிராப்பள்ளி மாவட்டம் பொதுவிநியோகத் திட்டம் 2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடிட தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி

04-01-2022 தேதி முதல் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மொத்தமுள்ள 8,27,249 குடும்ப அட்டைகளில் 7.62,787 குடும்ப அட்டைதாரர்கள் (92.21%) பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுள்ளார்கள்.

பரிசுத்தொகுப்பினை பெற்றுக்கொள்ளாத தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் திங்கள்கிழமை (17-01-2022) காலை 07 மணி முதல் அவர்களுக்குரிய நியாயவிலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

என மண்டல இணைப்பதிவாளர் தி.ஜெயராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.