11 வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விஜயா ஜெயராஜ் அமைச்சர் கே.என்.நேருவிடம் விருப்ப மனு வழங்கினார்.
திருச்சி உறையூர் 11வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட விஜயா ஜெயராஜ் விருப்ப மனு அளித்து உள்ளார்.
திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது.
இந்த வகையில் திருச்சி திமுக மத்திய மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்ட பகுதிகளுக்கு உட்பட்ட கட்சியினரிடம் இருந்து மனுக்கள் இன்று பெறப்பட்டது.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் விருப்ப மனு பெறும் நிகழ்வை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்.
மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகரச் செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய், ராம்குமார்,மோகன் தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருக்கான பதவிக்கு தில்லைநகர், உறையூர், கலைஞர் நகர், ஸ்ரீரங்கம், கிராப்பட்டி பகுதி செயலாளர்கள் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டது.
அப்போது திருச்சி மாநகராட்சி உறையூர் பகுதி 11வது வார்டு மாமன்ற உறுப்பினருக்கான பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் திமுக மாவட்ட துணைச்செயலாளர் விஜயா
ஜெயராஜ் 11வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்தார்.
உறையூர் திமுக பகுதி செயலாளர்
இளங்கோவனிடம் விருப்ப மனுக்கான கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்தி, விருப்ப மனுவை அமைச்சர் கே.என்.நேருவிடம் விஜயா ஜெயராஜ் வழங்கினார்.
இன்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் முத்துச்செல்வம்,
எஸ்ஆர்.பாலசுப்ரமணியம்,துர்கா தேவி உள்ளிட்ட ஏராளமானோர் விருப்ப மனு அளித்தனர்.