மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் சர்ச்சைக்குரிய ஒளிக்காட்சி.பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் முயற்சியால் நீக்கப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் தண்ணீர் திரை ஒலி ஒளி காட்சி நிகழ்ச்சி திட்டப் பணியில் காணொளிக்காட்சி முன்னோட்டம்
மலைக்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் தொடர்பான விளக்க படக்காட்சி சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்ட போது மேற்படி காணொளி காட்சியில் மாற்று மதத்தின் குறியீடு காட்சிகள் (முஸ்லிம்களின் பிறை மற்றும் கிறிஸ்தவர்களின் மாதா உருவம்) இருப்பதாக திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இனி தொடர்ந்து நேற்று நள்ளிரவு ஒரு மணி வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து இன்று பகல் 11 மணி முதல் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நகர பொறியாளர் கூட்ட அரங்கில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன்,மலைக்கோட்டை பகுதி மண்டல் தலைவர் மகேந்திரன்,பீமநகர் பகுதி மன்டல் தலைவர் புருஷோத்தமன்,
நெசவாளர் பிரிவு மாநகர மாவட்ட செயலாளர் சிந்தாமணி என்.சீனிவாசராவ்,இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு பொது செயலாளர் மனோஜ் குமார் மற்றும்
மாநகராட்சி சார்பில் உதவி செயற்பொறியாளர்கள்,
நிர்வாக பொறியாளர்கள், கண்டன்மெண்ட் காவல்துறை உதவி ஆணையர் அஜய் தங்கம்,மேற்கு வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பேச்சுவார்த்தையின் முடிவில் பாரதிய ஜனதா கட்சியினரின் கோரிக்கையை ஏற்று மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் நீர்த்திரை மூலம் ஒளி-ஒலி காட்சியில் இடம் பெற்று இருந்த சர்ச்சைக்குரிய மத குறியீடு காட்சிகள் நீக்கம் செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
பின்னர் இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் கூறுகையில் :
இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான மலைக்கோட்டை கோயிலின் தெப்பக்குளத்தில் மாற்று மதத்தின் குறியீடுகளை இந்துக்களால் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் .
இதுவே மற்ற மதத்தின் இடங்களில் இந்துக்களின் கோயில் விளம்பர போஸ்டர் கூட ஒட்ட முடியாத நிலை உள்ளபோது இது எவ்வாறு நடைபெற்றது.
இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் என தெரியும்.
நீண்ட போராட்டத்துக்கு பின்பு மாற்று மதத்தின் ஒளிக்காட்சியினை நீக்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என ராஜசேகரன் கூறினார் .