திருச்சி அருகே மாடு ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி பணம் கேட்டு மிரட்டிய போலி இந்து அமைப்பினர் 2 பேர் கைது.
மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை மறித்து பணம் கேட்டு லோடுமேன்களை தாக்கிய போலி இந்து அமைப்பினர் கைது.
ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து பொள்ளாச்சிக்கு மாடுகளை கேரள பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் மாடுகளை ஏற்றிக் கொண்டு, பெரம்பலூர் – துறையூர் வழியாக வந்த போது,
கிழக்கு வாடி என்ற இடத்தில் லாரியை 2 கார்களில் வழிமறித்தனர்.
அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் மாநிலத் தலைவர் கல்கி ராஜசேகர் தலைமையில் வந்துள்ளதாகவும் அந்த அமைப்பின் பசு பாதுகாதுப்பு பிரிவு என்றும் கூறி , லாரியில் இருந்த லோடுமேன்களை இறங்கச் சொல்லி ,
அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியும், தராவிட்டால் லாரியை கொளுத்தி விடுவோம் எனக் கூறி மிரட்டினர் .
பணம் தராததால் லோடுமேன் மணிகண்டன் , ரவி ஆகிய இருவரையும் குச்சியால் தாக்கினர்.
இதில் மணிகண்டனுக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்த துறையூர் காவல் உதவி ஆய்வாளர் சேகர் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ,
மாடு ஏற்றி வந்த லாரியையும், தடுத்து மிரட்டி தாக்கிய இந்து அமைப்பினரையும் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர் .
தாக்குதலில் காயம் பட்ட லாரி லோடுமேன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிந்து மாநில அமைப்பாளர் கே.ஆர்.சிரஞ்சீவி , மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.
போலி இந்து அமைப்பின் பெயரில் பல்வேறு குழுவினர் மாநிலமெங்கும் இதே போல் லாரிகளை மறித்து, பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பரவலாக புகார்கள் இருந்து வரும் நிலையில் துறையூர் அருகே நடந்த சம்பவத்தில் போலீசார் போலி இந்து அமைப்பைச் சேர்ந்த இருவரை வழக்கு பதிவு செய்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக இது போல் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் , லாரியில் மாடுகளை உரிய விதிகளைப் பின்பற்றி முறையாக எடுத்துச் செல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் .