திருச்சியில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
திருச்சி எடத்தெருவில் உள்ள 25 வார்டுக்கு உட்பட்ட பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் நலத்திட்டங்களை வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் ஜெ.சீனிவாசன் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து இருந்தார்.
இந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன், பொருளாளர் மனோகரன், பகுதி செயலாளர் அன்பழகன் சுரேஷ் குப்தா வட்டச் செயலாளர்கள்,
அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.