தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறம் மக்கள் நல சங்கம் சார்பில் 3லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறம் மக்கள் நல சங்கம் சார்பில் 3லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
அறம் மக்கள் நல சங்கம் சார்பில் திருச்சி சங்கிலியாண்டபுரத்தி தீ விபத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது.
திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 17-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
வீடுகளில் இருந்த சமையல் பாத்திரங்கள் உடைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின.
இதனை அறிந்து திருச்சி அறம் மக்கள் நல சங்க நிறுவனத்தலைவர் ராஜா, மற்றும் அறம் மக்கள் நல சங்க இயக்குனர் எஸ்.ஆர்.கே ரமேஷ் குமார் ஆகியோர் உடனடியாக 17 குடும்பத்தினருக்கும் ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான அரிசி, மளிகை பொருட்கள், சமையல் பாத்திரங்கள், உடைகள், பாய்கள் மற்றும் அவசரகால பொருட்கள் அனைத்தும் வழங்க ஏற்பாடு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அறம் மக்கள் நல சங்க உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று அனைத்து குடும்பத்தினருக்கும் நிவாரண பொருட்களை வழங்கினர்.
பின்பு அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக உணவும் வழங்கப்பட்டது.
மேலும் இப்பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் உங்களுக்கு ஏதாவது தேவை என்றால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்றும் கூறி வந்துள்ளனர் அறம் மக்கள் நல சங்கம் நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் அறம் மக்கள் நல சங்கம் தலைவர் ராஜா மற்றும் இயக்குநர் ரமேஷ் இருவரும் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் தங்களது சங்க நிர்வாகிகளை அனுப்பி பொது மக்களின் உடனடித் தேவை யை பூர்த்தி செய்து வைத்தனர்.
எந்த விளம்பரமும் இல்லாமல் கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட பல்லாயிரம் பேருக்கு இதே போல் நிவாரணப் பொருட்களை வழங்கினர் மக்கள் நல சங்கத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பிளாஸ்டிக் குடம், அஞ்சு கிலோ அரிசி, 50 மதிப்புள்ள காய்கறிகள் பையை வைத்து படம் எடுத்து விளம்பரம் தேடும் தேடும் அரசியல்வாதிகள் போல் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் அறம் மக்கள் நல சங்கத்தினரை அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் நன்றியுடன் பாராட்டினர்.