முத்தரசநல்லூர் வெள்ளாளர் தெருவில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள
அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் இடும்பன் மதுரைவீரன் கருப்பண்ணசுவாமி சமேத ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தின்
மகா கும்பாபிசேக விழா கடந்த 4ஆம் தேதி அன்று முதல் கால யாக பூஜையுடன் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து 5 ஆம் தேதி ஸ்ரீசக்தி மாரியம்மனுக்கு முதல் கால யாக பூஜையும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.
ஆறாம் தேதி திங்கட்கிழமை அன்று மூன்றாம் கால யாக பூஜையும் | இதனைத் தொடர்ந்து ஏழாம் தேதி யாகசாலையில் மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து ரூபமாக விளங்கும் அன்னைக்கு ஐந்தாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை காரியகாரப்பிள்ளை சிவக்குமார் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்..