திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இன்று ஆயுதபூஜை கொண்டாட்டம் நடைப் பெற்றது.
இங்கு ரயில்வே என்ஜின்கள், கேரேஜ் பெட்டிகள், வேகன் பெட்டிகள் போன்றவைகள் பழுது பார்த்தும், தயாரித்தும் இந்தியாவின் பல பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்படுகிறது.
இங்கு சுமார் 3800 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பல்வேறு ஷாப்புகள் உள்ள பணிமனை இங்கு உள்ளது.
இன்று அந்தந்த ஷாப்களை சேர்ந்த தொழிலாளர்கள் பூஜை நடத்தினர்.
பணிமனை பொது மக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தால் தொழிலாளர்களின் குடும்பத்தினர்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து , ரயில் எஞ்சின்கள், பொருள்களின் முன்பாக இருந்து ஆர்வத்துடன் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.
பொன்மலை ரயில்வே பணிமனையில் வட மாநிலத்தவர்கள் 1200 மேற்பட்டவர்கள் பணி புரிந்து வருவதால் அதிகளவு வட மாநிலத்து குடும்பங்களை காண முடிந்தது.