கஞ்சா, லாட்டரி விற்ற 4 பேர் கைது உள்ளிட்ட இன்றைய திருச்சி க்ரைம் செய்திகள் .
கஞ்சா, லாட்டரி விற்ற 4 பேர் கைது உள்ளிட்ட இன்றைய திருச்சி க்ரைம் செய்திகள் .
திருச்சியில்
கஞ்சா, லாட்டரி விற்றதாக 4 பேர் கைது.
மிரட்டி பணம் பறித்தவரும் சிக்கினார்
1
திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையிலான போலீசார் சின்ன கடை வீதி ,கீழ ஆண்டாள் வீதி சந்திப்பு பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்றதாக தனசேகரன், உதயகுமார், ஆண்ட்ரூஸ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இந்த கஞ்சா வைத்திருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவின் மதிப்பு ரூ 22 ஆயிரத்து 500 ஆகும்.
இதே போல் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஆர். சி. நகர் ஜங்சன் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விட்டதாக கணபதி என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து அதற்கான ஆவணங்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
2 .
பணம் கேட்டு
மிரட்டியவர் கைது.
திருச்சி உறையூர் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன்.இவரது மகன் செல்வக்குமார். இவர் உறையூர் டாக்டர் ரோடு பகுதியில் உள்ள வணிக வளாகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் கத்திமுனையில் செல்வகுமாரிடம் மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிந்து முகமது சயீப் என்ற வாலிபரை கைது செய்தார். அவரிடமிருந்து கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.
3.
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் முதியவர் மாயம்.
மனைவி புகார்.
திருச்சி கல்யாண சுந்தரபுரம், சின்னப்ப நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் பாலு. ( வயது 61 ).இவர் கூடலூரில் உள்ள சகோதரியின் வீட்டுக்கு செல்வதற்காக சத்திரம் பஸ் நிலையம் சென்றார். அங்கு கூடலூர் பஸ் நிறுத்தத்திற்கு சென்றவர் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை .
இதுகுறித்து பாலுவின் மனைவி லதா கோட்டை போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்கு பதிந்து மாயமான பாலுவை தேடி வருகிறார்.

