வடிகால் வசதி ஏற்படுத்தித் தர 45வது வார்டு பகுதி பொதுமக்கள் மாநகராட்சி ஆணையரிடம் மீண்டும் மனு .
வடிகால் வசதி ஏற்படுத்தித் தர 45வது வார்டு பகுதி பொதுமக்கள் மாநகராட்சி ஆணையரிடம் மீண்டும் மனு .
பாதாள சாக்கடை வசதி, சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி அமைத்துத் தர 45வது வார்டு பொதுமக்கள் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் கோ-அபிஷேகபுரம், 45-வது வார்டு, புதிய செல்வநகர்.
பாரதியார் 5-வது தெரு. கிழக்கு பகுதியில் குடியிருந்து வருகிறோம்.
எங்களது பகுதிக்கு, பாதாளசாக்கடை வசதிக்கும். தார்சாலை அமைக்க கேட்டு தங்களிடம் கொடுத்த மனுவிற்கு (10-07-2020) பதில் கடிதமாய் நகல் எண் இ1/17444/2020 கோ.அ 28-09-2020 கிடைக்கப்பெற்றோம்.
மேலும் எங்களது தெருக்கள் தவிர ஏனைய தெருக்களில் சாலை அமைந்துள்ளதால் எங்களது பகுதியிலிருந்து மழைநீர் வெளியேறுவதற்கு வடிகால் இல்லாததாலும் மழைநீர், குளம் போல் தேங்கி உள்ளது.
இதனால் எங்களுக்கு போக்குவரத்தும் பாதித்து உள்ளது. மேலும் கொடிய நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே தாங்கள் எங்கள் பகுதிக்கு மழைநீரை வெளியேற்றி பாதாள சாக்கடை அமைத்தும், தார் சாலை அமைத்தும், தரும்படியும்
தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என பொதுமக்கள் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.