கடவுள்களை அவமதித்து பேசிய சாமியார்(?) சிவகுமார்.திருச்சி சிறையில் அடைப்பு.
கடவுள்களை அவமதித்து பேசிய சாமியார்(?) சிவகுமார்.திருச்சி சிறையில் அடைப்பு.
சர்ச்சை சாமியார் சிவக்குமார் மீண்டும் சிறையிலடைப்பு.
சென்னை புத்தகரத்தில் யோகக்குடில் என்ற பெயரில் ஆசிரமம் நடத்திவரும் சர்ச்சை சாமியார் சிவக்குமார், பல்வேறு மதங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஜாதிகள் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் எங்களையும், நாங்கள் பின்பற்றும் மெய்வழி மதத்தையும், எங்கள் குலதெய்வத்தையும் அவமதித்து, மதவுணர்வுகள் கடுமையாக புண்படும்படி தகாத வார்த்தை கூறி தொடர்ச்சியாக இருபதுக்கும் மேற்ப்பட்ட யூடியூப் வீடியோக்கள் வெளியிட்டுள்ளார்.
மேலும் அனைத்து மத கடவுளர்களையும் அவமதித்தது, பெண்களை ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த 26.7.2021 அன்று வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் திருச்சி மாநகர கமிஷனர் அருண் அவர்களிடம், யோக குடில் சிவக்குமார் மீது அளித்த புகார் உறையூர் காவல் நிலையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு 6.8.2021 அன்று குற்ற எண்.607/21ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி வழக்கில் சிவக்குமார் உரையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை சென்னை சென்று கைது செய்து
திருச்சி குற்றவியல் நடுவர் எண் 4 (JM4) முன்பாக நீதிமன்ற காவலுக்காக ஆஜர்படுத்தப்படுத்தினர்.
நீதிபதி குமார் அவர்கள் இ.த.ச பிரிவுகள் 153, 153A(i)(a), 295(A), 298, 504, 505(1)(b) , 505 (2) ஆகிய குற்றச் செயல்களுக்காக
சிவக்குமாரை 13.10.2021 வரை இவ்வழக்கில் சிறையிலடைக்க உத்தரவு பிறப்பித்தார்.