விவசாயிகளின் அறவழிப் போராட்டம் வன்முறையாக மாறாமல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருச்சியில் இ.யூ.மு.லீ. தலைவர் காதர் மொகிதீன் பேட்டி.
திருச்சியில் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது உள்ளிட்டவற்றைக் கண்டித்து எதிர்க்கட்சிகளின் அறிவிப்பின்படி,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மைதீன் தலைமையில் திருச்சி காஜாமலையில் அவரது இல்லத்திற்கு முன்பாக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து திருச்சி காஜா நகரில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓன்றிய அரசை கண்டித்து 10 நிமிடம் கோஷங்களை எழுப்பினார்கள்.
நிமிடம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜி.எஸ்.ஏ. மன்னான்,
புதுச்சேரி மாநில தலைவர் டி. இப்ராஹிம் குட்டி, புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது அலி, புதுச்சேரி மாநில செயலாளர்கள் ஹம்சா,ராஜா, முஹம்மது,, தேசிய கவுன்சில் உறுப்பினர்.முத்தீன் மைந்தன், பைஜுர் அலி, திருச்சி காஜா தொண்டு நிறுவன தலைவர் ஏ.கே. ஷாகுல் ஹமீது, திருச்சி கேஎம்சிசி மாநில செயலாளர் முஹம்மது ஜாகீர், திருச்சி மாவட்ட கேஎம்சிசி இணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது :
ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அதே போன்று தமிழகத்தில் அதேபோல் ஆர்ப்பாட்டங்கள் மாநில முழுவதிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்த வேண்டும் என்ற தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் முஸ்லிம் லீக் சார்பில் கட்சி தலைமை அலுவலகம் மற்றும் மாவடட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சியில் எனது தலைமையில் வீட்டு முன்பு புதுச்சேரி மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இதே போன்ற ஆர்ப்பாட்டங்கள் பல்வேறு வீடுகளுக்கு முன்பு நடைபெற்றது.
கேள்வி : புதுதில்லியில நடைபெற்று வரும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் முடிவு இல்லாமல் போய் கொண்டு இருக்கிறேதே
பதில்:
புதுதில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் சற்று ஏறாக்குறைய ஓராண்டு காலத்தினை நெருங்கி கொண்டு இருக்கிறது. ஆனால் மத்திய அரசு அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
பிடிவாதம். செய்யாமல் மக்கள் விரோதச் சட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும்.
மத்திய அரசின் வேளாண் திருத்ததித் சட்டங்களை கைவிடக் கோரி
புதுதில்லியில் அறவழியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது, தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் விவசாயிகளிடம் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறவழிப் போராட்டம், வன்முறையாக மாறாமல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் சட்டங்களை கைவிட வேண்டும். மத்திய அரசு உடனே விவசாயிகள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும். இன்று வரை விவசாயிகள் போராட்டம் அமைதியாகவும், சட்ட ரீதியாகவும் நடைபெற்று வருகிறது. அது வன்முறை போராட்டமாக மாறி விடாமல் தடுப்பது மத்திய அரசின் தலையாய கடமையாகும். உடனடியாக மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.