Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சோமரசம்பேட்டையில் போலி லாட்டரி சீட்டு அச்சடித்த கும்பல் கைது

0

'- Advertisement -

திருச்சி சோமரசம்பேட்டையில் போலி லாட்டரி சீட்டு அச்சடித்த கும்பல் கைது

Ad banner

ஆட்டோ, கலர் ஜெராக்ஸ் மிஷின்கள் பறிமுதல்..

திருச்சி மாவட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குணசேகரன் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

இதனையடுத்து திருச்சி உய்யக் கொண்டான் திருமலை சண்முகா நகர் 15வது கிராஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் அச்சிடப்பட்டு பல மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் சண்முகா நகர் 15வது கிராஸ் பகுதியில் உள்ள தமிழரசன் (வயது 41) என்பவரது வீட்டிற்கு திடீரென்று சென்று போலீசார் அங்கு இருந்தவர்களை சுற்றி வளைத்து அந்த வீட்டின் உள்ளே அறையை சோதனை செய்து பார்த்தனர். அப்பொழுது வீட்டுக்குள் இருந்த லேப்டாப், ஜெராக்ஸ் மிஷின், செல்போன்கள் மற்றும் ரூபாய் ஒரு லட்சத்தி 28 ஆயிரத்து 450 பணம் மற்றும் கலர் பிரிண்டர் வெள்ளை பேப்பர்கள் ,கேரள வெளி மாநில லாட்டரி சீட்டின் பெயர் கொண்ட சீட்டுகள், லாட்டரி எண் குலுக்கல் தேதி எழுதிய சீட்டு போன்றவை அங்கு இருந்ததை போலீசார் பார்வையிட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தனிப்படை போலீசார் அந்த பொருட்களை கைப்பற்றி அங்கு இருந்த மூன்று நபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் உய்யக் கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 41 ) ஆட்டோ டிரைவர் என்பதும், அவருடன் சேர்ந்து குளித்தலை தாலுக்கா நங்கவரம் ஆசாரி தெருவை சேர்ந்த மீரான் (வயது 42) வழக்கறிஞரான இவர் குளித்தலை நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார்,மூன்றாவதாக கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா நெய்தலூர் அருகே உள்ள களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 42) என்பது தெரிய வந்தது மேற்கண்ட மூன்று பேரும் சேர்ந்து கேரளா மாநில லாட்டரி சீட்டுகளை போலியாக திருச்சியில் அச்சடித்து திருச்சி, கருர்,பெரம்பலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் மேற்கண்ட மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் வீட்டில் வைத்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் அச்சிடப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

லாட்டரி சீட்டு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து லாட்டரி சீட்டு கும்பலை பிடித்த தனிப்படை போலீசாரை திருச்சி மத்திய மண்டல ஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.