மலேசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடத்திய தொடர்ந்து 13 நேரம் சிலம்பம் சுற்றும் போட்டி. திருச்சி மாணவ மாணவிகள் பங்கேற்பு.
மலேசியா சிலம்ப கோர்வை கழக ஆசிரியர் கவியரசி சங்கர் அவர்களின் முயற்சியில் மலேசிய சிலம்ப கோர்வை நிறுவனர் சிலம்ப மாஸ்டர் அன்பழகன் முன்னிலையில் மாஸ்டர் அன்பரசன் மேற்பார்வையில் மலேசியா புக் ஆப் ரெக்காட் (மலேசியா சாதனை புத்தகத்தில்)
தொடர்ந்து 13 மணி நேரம் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் சிலம்ப மாணவ மாணவியர் பங்கு பெறும் சிலம்ப ஆன்லைன் சாதனை முயற்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் இருந்து 150 க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர்.
இந்தியாவில் இருந்து 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இதை மலேசிய புக் ஆப் ரெக்கார்டின் நடுவர்கள் தொடர்ந்து கண்காணித்து சான்று அளித்தனர்.
இந்த நிகழ்ச்சி காலை மலேசிய நேரம் 6 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது.
இதில் சிலம்ப கோர்வைக் கழக ஆசான், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அனைவரும் பங்கு பெற்றனர்.







