2021 நிறுவன தின விழாவை கொண்டாடியது என்.இ.டி திருச்சி
திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக்கழகம் (என்.இ.டி திருச்சி) தனது 58வது நிறுவன தின விழாவை இன்று கொண்டாடியது.
இந்நிகழ்ச்சியில் இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குனர் பேராசிரியர் கோவிந்தன் ரங்கராஜன் பிரதம விருந்தினராக பங்கேற்றார்.
2020-21 கல்வியாண்டின் மாணவ மன்றத்தின் தலைவர் கமலேஷ் கண்ணா அனைவரையும் ஆன்லைன் வழியாக வரவேற்றார்.
டா. ராமகல்யாண் அய்யாகரி, நிறுவனத்தின் அனைத்து துறைகளின் ஆசிரியர்கள் மற்றும் மானணவ மாணவிகளின் சாதனைகளை பற்றி விளக்கினார்.
பிரதமரின் ஆராய்ச்சி நிதியுதவியை (PMRF) பெற்ற 13 ஆராய்ச்சி மாணவர்களை பாராட்டி, கடந்த ஆண்டில் நிறுவனத்தில் காப்புரிமை பதிவுகள் அதிகரித்து இருக்கிறது என்றார்.
தொடர்ந்து, நிறுவனத்தின் துறைகள் பெற்ற 8.5 கோடி மதிப்பிற்கு மேலான பல்வேறு ஆராய்ச்சி நிதிகள் மற்றும் ஆராய்ச்சி பதிப்புகள் பற்றின விவரங்களை தெரிவித்தார்.
கருவி மற்றும் கட்டுபாடு பொறியியல் துறையின் மானவர்கள் “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கதான்” (Smart India Hackathon) போட்டியை வென்றனர் என்பதை கூறி,
பல்வேறு கலாச்சார மற்றும் தொழில்நுட்ப விழாகளில் பங்கேற்ற பிரபலர்களை பற்றி குறிப்பிட்டார். மேலும் நிறுவனத்தின் பசுமையை மேம்படுத்த ‘மியாவகி’ காடு வளர்க்க படுகிறது என்றார்.
இதையடுத்து என்.ஐ.டி. இயக்குனர் டா. மினி ஷாஜி தாமஸ் உரையாற்றினார். ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் உட்பட்ட நிறுவன சமுதாயத்தை, கரோணா பெருந்தொற்றின் கட்டுபாடுகளை மீறி டிஜிட்டல் வாயிலாக கற்றல்-கற்பித்தலை மாற்றியமைத்ததற்கு பாராட்டினார்.
தேசிய கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து ஆண்டுதோறும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிடும் என்.ஐ.ஆர்.எஃப் என்கிற பட்டியலில் தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி பொறியியலில் 9வது இடத்தையும், மொத்த பட்டியலில் 24வது இடத்தையும் பெற்றுள்ளது.
இதற்காக, நிறுவனத்தின் என்.ஐ.ஆர்.எஃப் பணிக்குழுவிற்கும் தகவல் உளவு குழுவிற்கும் நன்றி தெரிவித்தார்.
“ஏங்கள் 5-வருட (2019-24) வழிகாட்டி திட்டத்தின் பலன்களை பெற்று வருகிறோம். இவைகளை, ஆராய்ச்சி பதிப்புகள், புதிதாக அறிமுகபடுத்திய பாடங்கள், புதிதாக புலமை மய்யங்கள் தொடங்குதல், தொழில் நிறுவனங்களுடன் உறவு வலுபடுத்துதல் போன்ற செயல்களால் காணலாம்” என்று அவர் கூறினார்.
இந்த வழிகாட்டி திட்டத்தில் புதிய கல்வி திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன என்றார். இதையடுத்து,
2020-21 கல்வியாண்டின் பல முக்கிய நிகழ்வுகளை பற்றி விளக்கினார். 19 கோடி மதிப்புள்ள அதிவேக கணினி வசதி அமைத்தல், பல கோடிகள் மதிப்புள்ள புலமை மய்யங்கள் அமைத்தல், பல்வேறு ஆராய்ச்சி நிதிகள் பெறுதல் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப பயிற்சி முகாம்கள் நடத்துதல் போன்ற செயல்களை பற்றி குறிப்பிட்டார்.
நிறுவனத்தின் வரலாற்றை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பாரம்பரிய மய்யம் அமைக்கப்படும் என்றார். நிறுவனத்தை பசுமை வளாகமாக மாற்ற எடுத்துவரும் நடவடிக்கைகள் மற்றும் பெருந்தொற்றின் 2வது அலையின் போது வளாகத்தில் 500 படுக்கை தனிமை வசதி அமைத்ததை முன்வைத்து பேசினார்.
இந்த காலங்களில் நிறுவன வளாக பாதுகாவலர்கள் தொடர்ந்து உதவியை அளித்ததற்கு நன்றியை தெரிவித்து, தன் உரையை முடித்தார்.
அடுத்ததாக பிரதம விருந்தினர் ஆன்லைன் வழியாக உரையாற்றினார். அவர் தன் உரையில், நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கரோணா காலங்களில் பல சவால்களை மேற்கோண்டன என்று கூறினார். இதனால் அவர்கள் பலருக்கு மனதளவில் வேதனை ஏற்பட்டதாக கூறினார். இந்த வேதனையை போக்குவதற்கு, ஊரடங்கை மாணவர்கள் வீட்டில் தன் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருக்க கிடைத்த ஒரு வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்று கூறினார்.
கரோணா பெருந்தொற்று மாணவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் உலக அளவில் சுகாதார மேம்பாட்டுக்காக தீர்வுகளை கண்டுபிடிக்க ஒரு பெரிய வாய்ப்பு என்று கூறினார். குறிப்பாக, உலகில் சராசரியாக 600 கோடி மக்களுக்கு தரம் மிகுந்த சுகாதார சேவைகள் பெற தேவையான நிதியும் இல்லை, தவிர நிதி இருந்தாலும் பல இடங்களில் வசதிகள் இல்லை என்று கூறி, இந்த சவால்களுக்கு தீர்ப்பை தேடி ஆராய்க்குமாறு வேண்டிகொண்டார்.
அடுத்து, ஆளுநர்கள் மன்ற தலைவர் பாஸ்கர் பட் ஆன்லைன் வழியாக பேசினார்.
கடினமான சூழ்நிலையிலும் என்.இ.டி நிறுவனம் உச்சத்தில் பறந்ததாக கூறினார். அதிவேக கணினி வசதி அமைப்பது நிறுவனத்தின் ஆராய்ச்சியின் உயர்ந்த தரத்தை காட்டுகிறது என்றார். புதிய கல்வி திட்டத்தில் கூறிய இலக்குகளை நிறுவனம் கண்டிப்பாக அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
விருது வழங்கும் விழாவில், பல்வேறு துறைகளின் அதிக மதிப்பெண்கள் பெற்ற முறையில் பல இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் விருதுகள் பெற்றன. இறுதி ஆண்டு படிப்பை முடித்த சிறந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள், சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கணை உட்பட 29 விருதுகள் வழங்கபட்டன.
கூடுதலாக, 31 தலைப்புகளில் மாணவ மாணவிகள் நற்கொடைகள் பெற்றன. பல ஆசிரியர்களும் அவர்களின் ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் நிறுவனத்தின் மேம்பட்டுக்காக அளித்த செயல்பாடுகளுக்கு அங்கீக்காரமாக ‘சிறந்த ஆசிரியர்’ விருது பெற்றனர். உலோக பொறியியல் துறையும் இயற்பியல் துறையும் சிறந்த துறை விருதை பெற்றன.
பிறகு, 2020-21 மாணவ மன்றத்தின் துனை தலைவரான பாதிமா மாஹா, நடப்பு 2021-22 கல்வியாண்டின் புதிய மாணவ மன்றத்தை அறிமுகபடுத்திய பின் நன்றி உரையாற்றினார்.









