காமராஜர் பிறந்தநாள்: திருச்சியில் நாடார் உறவின்முறை சார்பில் முப்பெரும் விழா மற்றும் இலவச மருத்துவ முகாம்
திருச்சியில் நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முப்பெரும் விழா மற்றும் இலவச மருத்துவ முகாம்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 119வது ஆண்டு பிறந்தநாள் விழா, மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, காமராஜர் குறித்து மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
திருச்சி மதுரை ரோட்டில் உள்ள சந்தன மகாலில் நடைபெற்ற இந்த விழாவிற்கு நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் ராஜன் பிரேம்குமார் தலைமை வகித்தார். செயலாளர் மேகநாதன், துணைச் செயலாளர்கள் செல்வகுமார், ஜெயபாலன், துணை ஒருங்கிணைப்பாளர் பட்டு முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்வித் தந்தை தேவதாஸ் சாமுவேல் ஏற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு புதுச்சேரி
பார் கவுன்சில் வழக்கறிஞர் ராஜேந்திரகுமார், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை இலக்கிய அணித் தலைவர் அவனி மாடசாமி, ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பா. ஜான் ராஜ்குமார், டாக்டர் ஷர்மிளா மதுரம், டாக்டர் ஐவன் மதுரம், காந்தி மார்க்கெட் தொழிலதிபர் சரவணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இந்த விழாவில் ஒருங்கிணைப்பாளர் திருமணி, துணைத்தலைவர்கள் ஞானதுரை, செல்வின், தனபால், ஆலோசகர்கள் பழனிகுமார், ராஜா, பகவதி பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
துணைச் செயலாளர்கள் ஜெயபாலன், செல்வகுமார் ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பொருளாளர் ஜெயமோகன் நன்றி கூறினார்.
விழாவில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, தையல் இயந்திரம், மரக்கன்று உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
முன்னதாக முப்பெரும் விழாவை முன்னிட்டு திருச்சி டாக்டர் மதுரம் மருத்துவமனை மருத்துவர்கள் சர்மிளா மதுரம், ஐவன் மதுரம் தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.