தொடர் போராட்டம் நடத்த அனுமதி கோரி மலம் தின்னும் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
விவசாயிகள் பட்டை நாமம் போட்டு நூதனப் போராட்டம்
அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர்
விவசாயிகளின் விளை பொருள்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்யவேண்டும்.
70 கோடி விவசாயிகள் பெற்றுள்ள ஒரு லட்சம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும்.
கோதாவரி – காவிரி ஆறுகளை இணைக்கவேண்டும்.
60 வயது பூர்த்தியடைந்த அனைத்து பொதுமக்களுக்கும், மகன் – மகள் இருந்தாலும் கூட பிரதிமாதம் 5ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கவேண்டும்.
என்பன உள்ளிட்ட வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போலீஸாரின் தடையை மீறி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
நெற்றியில் பட்டை நாமம் போட்டு மலம் தின்னும்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மேகராஜன், பரமசிவம் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

