ஸ்ரீரங்கம் கோவில் கண்காணிப்பாளாரின் டூவீலரை திருடிய மர்ம ஆசாமி.
An unidentified person stole the two-wheeler of the Srirangam temple supervisor.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கண்காணிப்பாளாரின் இரு சக்கர வாகனம் திருட்டு
மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு.
திருச்சி ஸ்ரீரங்கம் தெற்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் பராந்தாம கண்ணன் (வயது 52). இவர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கண்காணிப்பாளராக உள்ளார். கடந்த மாதம் 30ந் தேதி தனது மோட்டார் சைக்கிளை ஸ்ரீரங்கம் தெற்கு வாசல் காலணி குடோன் முன்பு நிறுத்தி உள்ளார். பின்னர் வந்து பார்த்த போது தனது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்து உள்ளது.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

