இந்திய திரு நாட்டின் 77வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு குண்டூர் விஸ்தரிப்பு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் திருச்சி பாலமுத்துநகர் பகுதியில் சிறப்பான முறையில் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் சோழவேந்தன், பொருளாளர் சேவற்கொடியோன் ஆகியோர் முன்னிலையில். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி திருமுருகன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
விழாவில் மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு, இணை செயலாளர் ஆர்.கே.ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குடியரசு தினத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர்.
மேலும் சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள், சிலம்பம், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழாவை உற்சாகமாக நடைப்பெற்றது.
முன்னதாக செயலாளர் ஜார்ஜ் அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்வின் முடிவில் துணைத் தலைவர் தனராஜ் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் லலிதா, நாகராஜ், யுவஸ்ரீ, பழனியப்பன், தவமணி மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பத்தார்கள்.

