திருச்சி ஶ்ரீரங்கத்தில் வீட்டில் விளக்கு ஏற்றிய போது தீப்பற்றி இளம்பெண் உயிரிழப்பு.
ஸ்ரீரங்கம் உன் காவல் நிலைய போலீசார் விசாரணை.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடு அடுக்குமாடி குடியிருப்பு குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கர்.இவரது மனைவி வைதேகி (வயது 40).இவர் சம்பவத்தன்று வீட்டில் விளக்கு ஏற்றுக் கொண்டிருந்து உள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது ஆடைகளில் தீ பட்டு உள்ளது.
அந்த தீ மள மளவென பரவியதால் உடல் கருகி உள்ளது. உடனே அவரை வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி வைதேகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வைதேகியின் கணவர் சங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் ஶ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

