லால்குடி அருகே
செல்போனில் பிரீ பையர் போன்ற விளையாட்டுகளை விளையாடியதை தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை .
திருச்சி லால்குடி அருகே உள்ள கே,கே. நல்லூர் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்ல பாண்டியன் இவரது மகன் பிரபாகரன் ( வயது 18).
இவர் கே.கே. நல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
பிரபாகரனுக்கு செல்போனில் பிரீ பையர் வீடியோ கேம் விளையாடும் பழக்கம் உள்ளது.
பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் செல்போனும் கையுமாக இருந்துள்ளார்.
இதனால் அவரது படிப்பு பெரிதும் பாதித்து உள்ளது.
இதனால் கவலை அடைந்த அவரது தாயார் செல்போனில் வீடியோ கேம் விளையாடிய மகனை கண்டித்தார். மேலும் செல்போனில் விளையாட அவருக்கு தடை விதித்ததாக தெரிகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பிரபாகரன் யாரும் எதிர்பாராத வகையில் வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்து உள்ளார்.
பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரபாகரனை அவரது உறவினர்கள் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு பிரபாகரனுக்கு கடந்த 9 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருந்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இது குறித்து பிரபாகரனின் தந்தை செல்ல பாண்டியன் கேகே நல்லூர் காவல் நிலைய போலீசார் இடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் கேகே நல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்போனில் பிரீ பையர் விளையாடியதைதாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

