Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உணவு பாதுகாப்பு துறை சாதி சாலையோர உணவுக்கு விற்பனையாளர்களுக்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டம்.

0

'- Advertisement -

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை உணவு பாதுகாப்பு பிரிவு திருச்சி மாவட்டம் மற்றும் மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் சார்பில் சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திருச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி போஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தில் இருந்து குமார் 300-க்கும் மேற்பட்ட சாலையோர உணவுக்கு விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற சாலை ஓர உணவு விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் பதிவு சான்றிதழ்,மத்திய அரசின் உணவு பாதுகாப்பு பயிற்சி மேற் பார்வையாளர் சான்றிதழ் (FoSTaC)

மருத்துவ பகுதி சான்றிதழ்,சுகாதார பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டது..

நிகழ்ச்சியில உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளில் மற்றும் சாலையோர விற்பனையாளர்கள் கலப்படமில்லா ,தரமான உணவுகளை மட்டுமே மீட்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தில் பணியாற்ற கூடிய அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள்,பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.