Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரில் மின் கம்பங்களில் பேட்டரிகளை தொடர்ந்து திருடி வந்த 3 வாலிபர்கள் கைது.

0

'- Advertisement -

திருச்சி மாநகரில் மின் கம்பங்களில் பேட்டரிகளை தொடர்ந்து திருடி வந்த 3 வாலிபர்கள் கைது.

திருச்சி சமயபுரம் நரசிங்க மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 42 ) இவர் தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவர் மின் கம்பங்களில் சோதனை நடத்த சென்றபோது தில்லைநகர் பகுதிக்கு உட்பட்ட பாபா டவர்ஸ், சாஸ்திரி ரோடு விஸ்வநாதபுரம் ,உக்கிர காளியம்மன் கோவில் பருப்பு மில் உட்பட்ட 11 மேற்பட்ட இடங்களில் மின் கம்பங்களில் உள்ள 22 பேட்டரிகள் திருடு போனது தெரிய வந்தது.

இதே போல் தென்னூர் மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராக வித்யா (வயது 46) வேலை செய்து வருகிறார் புத்தூர் நான்கு சாலை ரவுண்டானா அருகே உள்ள மின்கம்பத்தில் பேட்டரிகள் மாயமானதாக அவருக்கு தகவல்கள் கிடைத்தது. உடனடியாக சென்று பார்த்தபோது 20 பேட்டரிகள் உட்பட சில மின்சாதன பொருட்கள் மின்கம்பங்களில் இருந்து திருட்டு போனது தெரியவந்தது,

தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக வேலை செய்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 53 ) . இவருக்கு அம்மையப்பன் நகர் பகுதியில் உள்ள மின்கம்பங்களில் பேட்டரிகள் திருட்டு போனதாக தகவல் கிடைத்தது இதை தொடர்ந்து அவர் அங்கு சென்று பார்த்தபோது மின்கம்பத்தில் இருந்த நான்கு பேட்டரிகள் திருட்டு போனது தெரிய வந்தது .

இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் குறித்து தில்லைநகர் குற்றப்பிரிவு போலீசார் ,உறையூர் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீசார் என திருச்சி மாநகர பிரிவுகளில் மூன்று காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பேட்டரி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதை தொடர்ந்து போலீசார் திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த பிரித்திவிராஜ் (வயது 29) அப்துல் ரகுமான் (வயது 26) மற்றும் இப்ராஹிம் ( வயது 29) ஆகிய மூன்று வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். .

அவர்களிடமிருந்து திருட்டு போன நான்கு பேட்டரிகள் மற்றும் ரூபாய் 13,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.