திருச்சி மாவட்டம் உத்தமர் கோயில், நோச்சியத்தில் ஸ்ரீ ஸ்ரீ அக்ரஹாரம் வேதிக் குழுமம்,ஸ்ரீ ஸ்ரீ அக்ரஹாரம் வைகுண்ட ஏகாதசி மார்கழி மஹோத்ஸவத்தை முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீ ரங்கநாதர் நகரில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஆச்சாரியர் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமியின் சிறப்பு பூஜையுடன் இன்று 19.12.2025 வெள்ளிக்கிழமை காலைஸ்ரீ ராமானுஜர் தியான மண்டபத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.
கஜ பூஜை, அஷ்வ பூஜை மற்றும் கோபூஜை ,108 சுஹாசினி பூஜை மங்கள மந்திரங்களோடும் அம்மன் அருளோடும் தெய்வீக ஆசிர்வாத பூஜை சிறப்பாக நடைபெற்றது.நாளை சனிக்கிழமையும் பூஜை தொடர்ந்து நடைபெறுகிறது
.ஜீயர் சாமிகள் அனைவருக்கும் இன்று போல் நாளையும் அருளாசி வழங்குகிறார்.

வரும் டிசம்பர் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி முதல் ஸ்ரீ ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம் வைபவம் 108 கன்யாகுழந்தைகள் பூஜையுடன் சிறப்பாக நடைபெற உள்ளது இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருளோடு இந்தப் புனித நாட்களில் பக்தி, பண்பாடு,பாரம்பரியம், ஆன்மீகம் ஒன்றிணயம் தருணங்களை தரிசித்து தெய்வீக ஆசிர்வாதம் பெற ஸ்ரீ அக்ரஹாரம் நிறுவனத் தலைவர்
கீர்த்திவாசன் ஐயர் அனைவரையும் அன்புடன் அழைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ அக்ரஹாரம் அதிகாரிகள் ஸ்ரீ சிவசங்கர்,சுரேஷ் ஆனந்தன்,பாரதி ஐயர் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்துள்ளனர்.

