ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு. தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் :….
ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே
ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஒருவர் சாவு. தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் :….
இன்று காலை 7 மணிக்கு முன்னதாக ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவ்வழியே சென்றபோது பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எதிர்பாராத விதமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்து உள்ளார் .

இந்த நிலையில்இறந்த நபர் வெள்ளை நிற வேஷ்டி மட்டும் அணிந்திருந்தார். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை. இது பற்றி தகவல் அறிந்த திருச்சி ரயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அபிராமி விரைந்து சென்று அவரது உடலை மீட்டு

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் அவரைப் பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவரைப் பற்றி விவரம் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் 9080563321 மற்றும் 9443472524.

