திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி முன்னாள் விளையாட்டு மாணவிகளுக்கான வாலிபால் மற்றும் நெட்பால் போட்டிகள் இன்று நடைபெற்றது .
திருச்சி சீதாலட்சுமி இராமஷ்வாமி கல்லுாரி பவளவிழாவை முன்னிட்டு கல்லூரியினுடைய முன்னாள் விளையாட்டு மாணவிகளுக்கு வாலிபால் மற்றும் நெட்பால் போட்டிகள் இன்று சனிக்கிழமை (13/12/2025 ) கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது

விழாவில் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முனைவர் T.சுதமதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் M.V. அல்லி அவர்கள் துவக்கவுரை வழங்கி போட்டிகளை துவக்கி வைத்தார்.
இப்போட்டிகளில் 100 க்கும் மேற்பட்ட முன்னாள் விளையாட்டு மாணவிகள் பங்கேற்றனர்.

பிற்பகலில் நடைபெற்ற நிறைவிழாவில் கல்லூரியின் சுயநிதிப்பிரிவு பொறுப்பாளர் முனைவர் S.சாந்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் நினைவுப் பரிசினை வழங்கினார்.

இவ்விழாவில் முன்னாள் விளையாட்டு மாணவிகள் சார்பாக சிறப்புக்கேடயம் வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட சிறப்புக் கேடயத்தை கல்லூரி முதல்வர் பெற்றுக் கொண்டார்.
நிறைவாக உடற்கல்வி உதவி உடற்கல்வி இயக்குநர் . பிரீத்தி நன்றியுரை வழங்கினார்.

