திருச்சியில்
தனியார் பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை .
எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் விசாரணை .

திருச்சி கிராப்பட்டி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 50) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நித்யாசேனா (வயது 43) இவரும் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சார்லஸ் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் .

இந்நிலையில் சார்லஸ் கடந்த 8ந் தேதி வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதையடுத்து
அவரை ஆபத்தான நிலையில் அவரது மனைவி உறவினர்களுடன் சேர்ந்து அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த சார்லஸ் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார் .
இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

