ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற திருச்சி நீதிமன்ற ஊழியர்களை தாக்கிய 2 வழக்கறிஞர்கள் உட்பட 3 பேர் கைது.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வரகூர் ஆதிதிராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் (வயது 34 ).இவர் ஸ்ரீரங்கம் ஜே எம் ஒன்றாவது நீதிமன்றத்தில் அமீனாவாக பணியாற்றி வருகிறார். இவர் நீதிமன்ற ஆணையின்படி சக அமீனா ரவிக்குமார் என்பவருடன் திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் கோவில் மேற்கு வாசல் பகுதியில் உள்ள ஒரு கடையின் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர். அப்போது அந்த கடையின் உரிமையாளர் மகன் சட்டக் கல்லூரி மாணவர் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மணிமாறன் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு வழக்கறிஞர்கள் மற்றும்
கடை உரிமையாளரின் மகன் சட்டக் கல்லூரி மாணவன் ஆகிய மூன்று பேரை ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் கைது செய்து உள்ளனர்.

