
திருச்சியில் பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
பெரியார் சிலையிடம் மனு கொடுத்தனர்
திருச்சி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பார்வையற்றோர் வாழ்வாதாரத்தை நிறைவேற்றக்கோரி திருச்சி பெரியார் சிலையிடம் நூதன முறையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சந்திரசேகர், துணைத்தலைவர் மனோகரன், பொருளாளர் வரதராஜன் உள்ளிட்ட பார்வையற்றோர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 5000 உதவித்தொகை வழங்க வேண்டும். பார்வையற்றோர் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்கு கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பார்வையற்றவர்களுக்கு தொழில் கூடம் அமைத்து வேலைவாய்ப்பை தேடி தர வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை பெரியார் சிலையிடம் வழங்கினார்கள்.

