தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற கோரி

திருச்சி, கரூர் மண்டலத்தை சேர்ந்த, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சிஐடியு ஆர்ப்பாட்டம்.
ஏராளமானோர் பங்கேற்பு.

தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சி.ஐ.டி .யு. திருச்சி, கரூர் மண்டலம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி | கரூர் மண்டல தலைவர் சிங்கராயன் தலைமை தாங்கினார். மண்டல பொதுச்செயலாளர் மாணிக்கம் துணை பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.ரெங்கராஜன், மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி,கரூர் மண்டல அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

