இ-பைலிங் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி

திருச்சி நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல் 6-ந் தேதி வரை வேலைநிறுத்தம் தொடக்கம்.
அவசர பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்கூட்டம் திருச்சி நீதிமன்றத்தில் உள்ள சங்க வளாகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு சங்கத்தின் தலைவர் எஸ்.பி.கணேசன் தலைமையில் செயலாளர் சி.முத்துமாரி முன்னிலையில் நடைபெற்றது.
.கூட்டத்தில் துணைத் தலைவர் வடிவேல்சாமி, பொருளாளர் சதீஸ்குமார், இணைச் செயலாளர் விக்னேஷ்,குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ்,துணைத் தலைவர் வரகனேரி சசிகுமார் மற்றும் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக இ-பைலிங் நடைமுறை குறித்து விவாதித்தில், அதில் இ-பைலிங் கட்டமைப்பு பணிகளை சரிசெய்தபிறகு இ-பைலிங்கை
நடைமுறைப்படுத்தக் கோரி இன்று (2-ந்தேதி) முதல் வருகின்ற 6-ந்தேதி வரை நீதிமன்ற பணியிலிருந்து விலகியிருப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வருகின்ற 4-ந்தேதி அன்று புதுக்கோட்டை ஜாக் பொதுக்குழு கூட்ட தீர்மானத்தின் முடிவின் பின்னர் நீதிமன்ற பணியிலிருந்து விலகியிருப்பது தொடருவது குறித்து தெரிவிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

