வேலைப்பளுவை குறைக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 2 நாள் உண்ணாவிரதம் இன்று தொடக்கம் .

வார ஓய்வு நேரத்தை 30 மணி நேரத்தில் இருந்து 46 மணி நேரமாக மாற்றி அமைக்க வேண்டும்.
ரயில் ஓட்டுனர்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

பயணப்படிக்கு ஏற்ப கிலோமீட்டர் அலவன்சை 25 சதவிகிதம் உயர்த்தி வழங்க வேண்டும்.
கிலோமீட்டர் அலவன்சில் 20 சதவிகித வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்.
உதவி ஓட்டுனர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் வேலைப்பளுவை குறைக்க வேண்டும்.

ஐ.டி.டி /ஐ.ஆர்.டி இட மாறுதல்களை உடனே செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் திருச்சி ரயில் நிலையம் அருகில் 48 மணிநேர தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று செவ்வாய்கிழமை துவங்கியது.
உண்ணா விரத போராட்டத்திற்கு அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்க கோட்ட செயலாளர் கண்ணையன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி டி.ஆர்.இ.யூ கோட்ட செயலாளர் கரிகாலன், கோட்ட தலைவர் சிவக்குமார், துணைப்பொதுச் செயலாளர் ராஜா, ஏ.ஐ.எஸ்.சி.எஸ்டி தென்மண்டல பொதுச்செயலாளர் இசக்கிமுத்து,
டி.ஆர்.இ.யூ.
சி.சி.ஆர்.சி கிளை தலைவர் எஸ்.எஸ். கணேசன் ஆகியோர் பேசினர். இந்த முன்னாள் கொடுத்த போராட்டத்தில் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

