
அரியமங்கலத்தில்
கஞ்சா விற்ற 2 பேர் கைது . பின்னர் ஜாமினில் விடுதலை
திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து ரெயில்வே கேட் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
இதையடுத்து அரியமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த
இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைபடுத்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில்
திருவறும்பூர் கூத்தைபார் பகுதியை சேர்ந்த
ரியாஸ் கான் (வயது 25) முகமது உசேன் (வயது 25) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவரிகளிடமிருந்து 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
பிறகு இருவரையும் போலீசார் ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர்..

