Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினர் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம். ஜனாதிபதிக்கு மனு…..

0

'- Advertisement -

தொழிலாளர் சட்ட திருத்த தொகுப்பை அமல்படுத்த கடந்த 21ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பை

மத்திய அரசு

திரும்ப பெற வேண்டும். விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மின்சார சட்ட திருத்தம் 2025ஐ திரும்ப பெற வேண்டும். விவசாயிகளின் விலை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகளின் நிலங்களைப் பறித்து கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.100 நாள் வேலை திட்டத்திற்கு போதுமான நிதியை ஒதுக்கி, விரிவாக்கம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ26,000 நிர்ணயம் செய்ய வேண்டும். அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பன்னாட்டு கம்பெனிகளிடம் விவசாய விதைகள் விற்பதற்கு அனுமதித்திடும் விதை சட்டத்தை கைவிட வேண்டும்

என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று புதன்கிழமை மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு

தொ.மு.ச மாவட்ட தலைவர் குணசேகரன்

தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் , ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர்

சுரேஷ், ஐக்கிய விவசாயிகள் முன்னணி திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அயிலை. சிவசூரியன், ஏஐசிசிடியு மாநில செயலாளர் ஞானதேசிகன், எச்.எம். எஸ். மாநில செயலாளர் ஜான்சன், பி.எச்.இ.எல் ஐஎன்டியுசி சங்க தலைவர் அலெக்ஸ்,

பி.எச்.இ.எல். எல்.எல்.எப். சங்க தலைவர் விஜய்பாலு, யுடியுசி மாவட்ட செயலாளர் சிவசெல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஎம்) மாநில துணைத்தலைவர் முகமதலி , தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐ) ராஜ்குமார், மக்கள் அதிகாரம் மாநில செயலாளர் செழியன், பெல் சிஐடியு சங்க துணைத்தலைவர் பிரபு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

 

ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினர் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பின்னர்

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி

மாவட்ட ஆட்சியர் வழியாக

இந்திய ஜனாதிபதிக்கு

கோரிக்கை மனுவை

அனுப்பக்கோரி

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.