திருச்சியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான யோகா போட்டி.1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு .
திருச்சியில் மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றது .
ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள்.
திருச்சி தன்வர் யோகா ஸ்டுடியோ மற்றும் பயிற்சி பெற்ற யோகா ஆசிரியர்கள் நல அமைப்பு இணைந்து இன்று திருச்சி சத்திரம் பேருந்து அருகில் உள்ள இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் பள்ளி,, கல்லூரி மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான யோகா போட்டிகளை நடத்தினர்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மட்டுமே பங்கு பெறும் இந்த யோகா போட்டிகளில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுகளும் பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது என இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் அமர்நாத் தெரிவித்தார்.
யோகா செய்வதனால் மொபைல் போனுக்கு அடிமையாக உள்ள சிறுவர்கள் அதிலிருந்து விடுபட அவர்களுக்கு இந்த யோகா பயிற்சிகள் உபயோகமாக இருக்கும். அதேபோல் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவு என்கிற ஃபாஸ்ட் ஃபுட் போன்ற பல உணவுகளை எடுத்துக் கொள்கிறோம் அதை யோகா செய்வதால் கட்டுக்குள் கொண்டு வர முடியும்…
இதேபோன்று பெரியவர்கள் சர்க்கரை நோய், பி.பி போன்றவற்றிலிருந்து விடுபடவும் இந்த யோகா பயிற்சிகள் உபயோகம் உள்ளதாக இருக்கும்.. குழந்தைகள் தங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்துவதற்கு இந்த யோகா பயிற்சிகள் மிகவும் உபயோகமானதாக இருக்கும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தங்கள் உடலில் ஆரம்பித்து மனம் வரை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா உதவும்.
எட்டு வயதில் இருந்து எவ்வளவு வயது வரை உங்களுக்கு யோகா செய்ய முடியுமோ அதுவரை யோகா பயிற்சி செய்யலாம். இது வயது சார்ந்த பயிற்சி கிடையாது, நம்முடைய முயற்சி தான் இந்த பயிற்சி ஏன் அமர்நாத் கூறினார் .
இன்று நடைபெற்ற மாவட்ட இளைஞர் நானா போட்டியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர் .
ஓபன் பிரிவில் ஆடவர் மற்றும் மகளிர்க்கு என தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
மேலும் திருச்சி புத்தூர் பகுதியில் இயங்கிவரும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவிகளுக்கான பள்ளியை சார்ந்த மாணவிகள் கலந்துகொண்டு பல்வாறு யோகாசனம் செய்து அசத்தினர்
இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் சக்ராசனா, உத்ராசனா, வீரபத்ராசனா, சர்வஉத்ராசனா, விருக்ஷாசனா, புஜங்காசனா உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்துகாட்டி அசத்தினர். வயது அடிப்படையிலான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டது.
போட்டிக்கான ஏற்பாடுகளை தலைவர் மாதவன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அமர்நாத் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் .. போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது .

