Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்..

0

'- Advertisement -

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்.

 

தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம்,தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் ,தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறையில் செயல்படுத்திடும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் யு.ஏ.டி.டி. 2. ஓ,உழவர்களை பாதிக்கக்கூடிய களப்பணியாளர்கள் இணைப்பினை கைவிட வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் .

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது.

 

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நல சங்கத்தின் தலைவர் தனசேகர்,தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா ஆகியோர் தலைமை தாங்கி பேசினர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தோட்டக்கலை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில், உழவர் பெருமக்களின் அதிக வருமானத்தை ஈட்டி தரக்கூடிய,தோட்டக்கலை வளர்ச்சியை பாதிக்கக்கூடிய யு.ஏ.டி.டி. 2. ஓ.திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும்,

 

தோட்டக்கலை பட்டயம் மற்றும் பட்டயதாரர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய யு.ஏ.டி.டி. 2. ஓ திட்டத்தை கைவிட வேண்டும்,

 

தோட்டக்கலைத் துறை கள அலுவலர்களை அவசர காலத்தில் பணியிடப் பெயர்ச்சி கோரிக்கை விடுவதை உடனடியாக நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.