Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கோரிக்­கை­களை நிறை­வேற்ற வலியுறுத்தி திருச்சி காந்தி மார்க்­கெட் அனைத்து வியா­பார சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்­பி­ன் தலைவர் காதர் மைதீன் தலைமையில் வியாபாரிகள் அமைச்­சர்­க­ளு­டன் இன்று நேரில் சந்­திப்பு.

0

'- Advertisement -

கோரிக்­கை­களை நிறை­வேற்ற வலியுறுத்தி திருச்சி காந்தி மார்க்­கெட்

அனைத்து வியா­பார சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்­பி­ன் தலைவர் காதர் மைதீன் தலைமையில் அமைச்­சர்­க­ளு­டன் இன்று நேரில் சந்­திப்பு.

 

திருச்சி பஞ்­சப்­பூர் புதிய காய்­கனி வணிக வளா­கத்­தின் செயல்­பா­டு­கள் குறித்து விளக்க வேண்­டும் என்று அமைச்­சர்­கள் கே.என்.நேரு அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி ஆகி­யோரை தனித்­த­னியே இன்று நேரில் சந்­தித்து காந்­தி­மார்க்­கெட் வியா­பாரி­கள் மனு அளித்­த­னர்.

 

திருச்சி பஞ்­சப்­பூர் ஒருங்­கி­ணைந்த காய்­கறி வளா­கம் குறித்த பல்­வேறு கோரிக்­கை­கள் தொடர்­பாக திருச்சி காந்தி மார்க்­கெட் அனைத்து வியா­பார சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்­பின் தலை­வர் எம்.காதர் மைதீன், செய­லா­ளர் என்.டி..கந்­த­சாமி, பொரு­ளா­ளர் ஜி.வெங்­க­டா­ச­லம் ஆகி­யோர் தலை­மை­யில்,

அவைத் தலை­வர் யு.எஸ்.கருப்­பையா, இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் எஸ்.எம்.டி முக­மது சபி, ஆலோ­ச­கர்­ ஏ.எம்.பி. அப்­துல் ஹக்­கீம், துணைத்தலைவர்கள் கே.டி.தங்கராஜ், சின்னாபாட்ஷா, துணை செயலாளர்கள் ஜமால் முகமது, சுலைமான், மற்­றும் கூட்­ட­மை ப்பை சேர்ந்த 25 வியா­பார சங்­கங்­க­ளின் நிர்­வா­கி­கள் அமைச்­சர்­கள் கே.என்.நேரு,அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி ஆகி­யோரை இன்று தனித்­த­னியே நேரில் சந்­தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்­த­னர்.

அந்த மனு­வில் கூறி­யி­ருப்­ப­தா­வது:-

 

திருச்சி பஞ்­சப்­பூர் பகு­தி­யில் புதிய மார்க்­கெட் வளா­கம் அமைப்­பது தொடர்­பாக கடந்த 29-6-2024 அன்று அப்­போ­தைய கலெக்­டர் தலை­மை­யில் நடை­பெற்ற காந்தி மார்க்­கெட் வியா­பா­ரி­கள் ஆலோ­சனை கூட்­டம் நடத்­தப்­பட்­டது. அதில், தற்­போது அமைக்­கப்­ப­ட­வுள்ள காய்­கறி மார்க்­கெட் வளா­கத்­தில் 822 கடை­கள் மட்­டுமே கட்­டப்­ப­டு­கி­றது.

 

ஆனால் காந்தி மார்க்கெட்டில் வியா­பா­ரி­கள் சுமார் 2500 வியா­பா­ரி­கள் இருக்­கும் பட்­சத்­தில் இது சாத்­தி­ய­மில்லை. இதே போல வெங்­காய மண்டி, வாழைக்­காய் மண்டி, பழ மண்­டி­க­ளுக்கு என தனி­யாக இடங்­கள் ஒதுக்­கப்­ப­ட­வில்லை. புதிய மார்க்­கெட் அமைக்க 23 ஏக்­கர் ஒதுக்­கப்­பட்­டா­லும், 1 ஏக்­க­ரில் மட்­டுமே கடை­கள் அமைப்­ப­தா­க­வும் , மீத­முள்­ளவை காலி­யி­டங்­க­ளா­கவே கிடக்­கும் என­வும் கூறப்­ப­டு­கி­றது. எனவே அவற்றை மாற்றி அமைக்க வேண்­டும் எனக்­கூறி கூட்­டத்­தி­லி­ருந்து வெளி­ந­டப்பு செய்­தோம்.

 

அப்­போது மீண்­டும் இது தொடர்­பாக ஆலோ­ச­னைக் கூட்­டம் நடத்தி, உங்­கள் விருப்­பப்­ப­டி­தான் புதிய காய்­கனி வளா­கம் கட்­டு­மான பணி­கள் தொடங்­கப்­ப­டும் என்று வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டது. அதன்­பி­றகு நக­ராட்சி நிர்­வா­கத்­துறை அமைச்­ச­ரும் எங்­கள் விருப்­பப்­ப­டியே அங்கு மார்க்­கெட் கட்­டப்­ப­டும் என்று வாக்­கு­றுதி அளித்­தார். இதற்­கி­டையே கடந்த 9-5-2025 அன்று முதல்-­­அ­மைச்­சர் பஞ்­சப்­பூர் காய்­கனி மார்க்­கெட்­டுக்கு அடிக்­கல் நாட்­டி­னார்.

 

இந்­த­நி­லை­யில் ரூ.236 கோடி­யில் ஒருங்­கி­ணைந்த காய்­கனி வணிக வளா­கம் கட்­டு­மான பணி­கள் தீவி­ரம் என்று நாளி­தழ்­க­ளில் செய்­தி­கள் வரு­கின்­றன. பஞ்­சப்­பூ­ரில் கட்­டப்­பட்டு வரும் புதிய வளா­கம் எதற்­காக கட்­டப்­ப­டு­கி­றது என்­றும், அதன் செயல்­பா­டு­கள் என்ன என்­பது குறித்­தும் எங்­க­ளுக்கு விளக்­கம் அளிக்­க­வேண்­டும்.

 

மேலும், அங்கு பெரிய அள­வி­லான லாரி­கள் வந்து செல்­ல­வும் வசதி ஏற்­ப­டுத்தி கொ டுக்க வேண்­டும். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு இருந்­தது.

 

அமைச்சர்கள் இருவரையும் சந்தித்த பின்­னர், திருச்சி காந்தி மார்க்­கெட் அனைத்து வியா­பார சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்பு தலை­வர் எம்.காதர் மைதீன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது:-

திருச்சி மாந­க­ரில் 6.40 ஏக்­க­ரில் அமைந்­துள்ள காந்தி மார்க்­கெட் தொடர்ந்து இங்­கேயே செயல்­ப­டும் என்­றும், இட­மாற்­றம் செய்­யப்­ப­டாது என்­றும் அமைச்­சர்­கள் உறுதி அளித்­துள்­ள­னர். இது வர­வேற்­கத்­தக்­கது .

ஆனால் அமைச்­சர் கே.என்.நேரு பஞ்­சப்­பூ­ரில் கட்­டப்­பட்டு வரும் புதிய வணிக வளா­கம் கட்டி முடித்த பின் டெண்­டர் முறை­யில் ஏலம் விடப்­ப­டும் என்­றும் அதில் காந்தி மார்க்­கெட் வியா­பா­ரி­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டும் என்­றும் கூறி­னார்.

இந்த கருத்து எங்­க­ளுக்கு மன வருத்­தத்தை அளிக்­கி­றது.

தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் கடந்த 9.5.2025 அடிக்­கல் நாட்டு விழா­விற்கு 2 நாட்­க­ளுக்கு முன்னாள் காந்தி மார்க்­கெட் வியா­பா­ரி­களை அழைத்து பேசி விட்டு தான் கட்­டிட பணி­களை ஆரம்­பிப்­போம் என்று அமைச்­சர் உறுதி அளித்­தி­ருந்­தார்.

ஆனால் இன்று அவர் சொல்­லும் கருத்து மிகுந்த அதிர்ச்­சியை அளிக்­கி­றது. 2 ஆயி­ரம் வியா­பா­ரி­க­ளுக்கு மேல் இருக்­கும் காந்தி மார்க்­கெட்­டில் 950 நிலை­யான கட்­டிட கடை­கள் இருக்­கும் பட்­சத்­தில் பஞ்­சப்­பூர் புதிய மார்க்­கெட்­டில் 700 கடை­கள் மட்­டுமே கட்­டப்­ப­டு­கி­றது.

அதில் உருளை , வெங்­காய மண்­டி­கள், பழ மண்­டி­கள், ஆகி­ய­வற்­றிற்கு இடம் ஒதுக்­கீடு செய்­யப்­பட வில்லை. அதை­யும் அமைச்­ச­ரி­டம் சுட்டி காட்­டி­யுள்­ளோம். பஞ்­சப்­பூர் ஒருங்­கி­ணைந்த காய்­கனி வணிக வளா­கத்­தில் காந்தி மார்க்­கெட் வியா­பா­ரி­க­ளுக்கு மட்­டுமே இடம் வழங்க வேண்­டும். மற்­ற­வர்­களை அங்கு வியா­பா­ரம் செய்ய அனு­ம­திக்­கக்­கூ­டாது. பஞ்­சப்­பூ­ரில் எந்­தெந்த கடை­கள் செயல்­ப­டும், காந்தி மார்க்­கெட்­டில் எந்­தெந்த கடை­கள் செயல்­ப­டும் என்று தெளி­வான பதில் அளிக்­கப்­பட வேண்­டும்.

இத­னால், பஞ்­சப்­பூர் மார்க்­கெட் தொடர்­பான குழப்­பம் தீர­வில்லை.

காந்தி மார்க்­கெட் அருகே உள்ள மக­ளிர் சிறையை மாற்­று­வ­தற்கு இடம் பார்த்­துக்­கொண்­டி­ருப்­ப­தாக அமைச்­சர் ரகு­பதி தெரி­வித்­துள்­ளார். அதன்­படி, மக­ளிர் சிறையை இங்­கி­ருந்து மாற்­றி­விட்டு அந்த இடத்­தில் சில்­லறை வியா­பா­ரத்­துக்­கும், தற்­போது உள்ள மார்க்­கெட்டை மொத்த வியா­பா­ரத்­துக்­கும் ஒதுக்­கீடு செய்­தால் வியா­பா­ரி­க­ளுக்­கும், பொது­மக்­க­ளுக்­கும் மிக­வும் பய­னுள்­ள­தாக இருக்­கும்.

விரை­வில் காந்தி மார்க்­கெட் வியா­பா­ரி­கள் அனை­வ­ரை­யும் அழைத்து அமைச்­சர்­கள், கலெக்­டர் தலை­மை­யில் கூட்­டம் நடத்தி பேச்­சு­வார்த்­தைக்கு அழைக்க வேண்­டும் என வலி­யு­றுத்தி உள்­ளோம். கூட்­டத்­தில் எங்­கள் கருத்­துக்­களை முழு­மை­யாக கேட்டு அதனை பரி­சீ­லித்து உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என கூறி­யுள்­ளோம்.

இவ்வாறு காதர் மைதீன் கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.