அமைச்சர் கே.என்.நேரு பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் மாநில அளவிலான பவர் லிப்டிங் போட்டி.
மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி – தேசிய அளவிலான போட்டிக்கு வீரர், வீராங்கணைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்ட வலுதூக்கும் விளையாட்டு சங்கம், தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்துடன் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாநில அளவிலான வலுதூக்கும் போட்டிகளை உறையூரில் உள்ள வண்டு உடற்பயிற்சி கூடத்தில் இன்று நடத்தியது.
பல்வேறு மாவட்டங்களில் உடற்பயிற்சி கூடங்களில் இருந்து 170 வீராங்கனைகள் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டேர் இப்போ போட்டியில் கலந்துகொண்டனர்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியே 53, 59, 66, 74, 83, 93, 105, 125 மற்றும் 125க்கும் மேற்பட்ட எடைபிரிவுகளில், பெஞ்ச் பிரஸ் மற்றும் கிளாசிக் டெட் லிப்ட் ஆகிய இருபிரிவுகளில் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர். மாஸ்டர்ஸ் சீனியர்கேட்டகிரியில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற வீரர். வீராங்கனைகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.
இதில் முதல் இரு இடங்களைபிடிக்கும் வீரர்,வீராங்கனைகள் ஹரித்துவாரில் வரும் ஜனவரி மாதம் 18ம்தேதி நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்பார்கள்

